2024 மே 08, புதன்கிழமை

கருணாகரனால் கடுப்பான தனுஷ்

George   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளம் திறமையாளர் ஒருவரது இயக்கத்தில் நடிக்க உள்ளேன். அவர் யார் என்று இன்று இரவு சொல்கிறேன். அவர் யார் என யூகியுங்கள் என்று தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சனிக்கிழமை, பதிவிட்டிருந்தார்.

தன்னுடைய ட்வீட், ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை கிளறும் என்று எதிர்பார்த்தார் தனுஷ். ஆனால் நடந்ததோ வேறு.

தனுஷ் ட்வீட் போட்ட சற்று நேரத்தில் கார்த்திக் சுப்புராஜ் என்று பதிலளித்தார் நகைச்சுவை நடிகர் கருணாகரன். அதனால், தனுஷ் எதிர்பார்த்த சஸ்பென்ஸ் கிடைக்கவில்லை. 

அன்று இரவு அவர் கார்த்திக் சுப்புராஜ் பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்தபோது அதை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அதனால் தனுஷ் சற்றே அப்செட்டானது மட்டுமல்ல, கருணாகரன் மீதான தன்னுடைய கடுப்ரையும் தன் நண்பர்கள் மத்தியில் வெளிப்படுத்தினாராம்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய திரைப்படங்களில் எல்லாம் கருணாகரன் தவறாமல் இருப்பார். இந்த விவகாரத்தினால் அனேகமாக தனுஷை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தில் கருணாகரன் இருக்க மாட்டார் என்று தோன்றுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X