2026 மார்ச் 14, சனிக்கிழமை

இந்திய மீனவர்கள் 21பேருக்கு விளக்கமறியல்

George   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து புதன்கிழமை(27) அதிகாலை கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.

மேலும், குறித்த மீனவர்களில் வயது குறைந்த சிறுவர் தொழிலாளர் ஒருவரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை மன்னாரில் உள்ள சிறுவர் இல்லத்தில் அனுமதிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இந்திய மீனவர்கள் 21 பேர், 3 படகுகளில் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து, மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர், குறித்த 21 இந்திய மீனவர்களையும் கைது செய்து தலைமன்னார் கடற்படையினரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனர்.

விசாரணைகளின் பின்னர் புதன்கிழமை இரவு 7 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளினூடாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போது, விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான், கைது செய்யப்பட்ட 21 மீனவர்களில் 20 பேரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதோடு, சிறுவர் தொழிலாளியை எதிர்வரும் 11ஆம் திகதி வரை மன்னாரில் உள்ள சிறுவர் இல்லத்தில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X