2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியின் சுற்றுலாத்துறை தொடர்பில் வனஜீவராசிகள் அமைச்சர் ஆராய்வு

Niroshini   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சிக்கு வியாழக்கிழமை (28) விஜயம் மேற்கொண்ட வனஜீவராசிகள் அமைச்சர் அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்தை மாவட்டச் செயலகத்தில் சந்தித்து, கிளிநொச்சி மாவட்டத்தில் இயற்கையான சுற்றுலாத் தளங்கள் தொடர்பில் ஆராய்ந்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட சுற்றுலாத்தளங்களை விருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடினார். இரணைமடுக்குளத்தின் கீழான பகுதியில் சுற்றுலாத்துறை விருத்தி செய்தல் தொடர்பில் ஆராய்ந்தார்.

மேலும், சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயம், வன்னேரிக்குளம் பறவைகள் சரணாலயம், தம்பிராய் சுற்றுலாப் பிரதேசம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்து, சுற்றலாத்துறையின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்துக்கு அதிக வருமானம் கிடைப்பதற்கான வழிவகைகள் குறித்து கலந்தாலோசித்தார். மேற்படி இடங்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்வதாக அமைச்சர் உறுதியளித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கர் பகுதி சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .