2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அகதிகளுக்காக கண்கலங்க முடியாது: அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 28 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

படகில் வரும் அகதிகளுக்காக அவுஸ்திரேலியா கண்கலங்க முடியாது என அவுஸ்திரேலியாவின் பிரதமர் மல்கொம் டேர்ண்புல் இன்று வியாழக்கிழமை (28) தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு வெளியேயுள்ள செயற்பாட்டு முகாமை மூடவும் என பப்புவா நியூ கினி உத்தரவிட்டமையை அடுத்து, டேர்ண்புல்லின் குடியேற்றக் கொள்கை சிக்கலுக்குள்ளாகிய மறுதினமே மேற் படி கருத்து வெளியாகியுள்ளது.

எதிர்வரும் வாரங்களில் தேர்தலை எதிர்கொள்ள எதிர்பார்த்துள்ள மல்கொம் டேர்ண்புல், படகின் மூலமாக வந்தடைந்த உண்மையாக அகதிகளை அவுஸ்திரேலியாவில் குடியேற்றுவதாலும், மேலும் பலர் ஆபத்தான பயணத்தைத் தொடர ஊக்குவிப்பதாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

ஆட் கடத்தலை தடுப்பதன் மூலம் மக்கள் கடலில் மூழ்குவதை தாங்கள் தடுத்ததாக ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்த டேர்ண்புல், இதற்காக தாங்கள் கண்கலங்க முடியாது எனவும் தங்களது தேசிய நோக்கத்தில் தாங்கள் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பதாக மேலும் தெரிவித்தார்.

படகில் வரும் அகதிகளை, பப்புவா நியூ கினியின் மனுஸ் தீவிலுள்ளதும் நவ்ருவிலுமுள்ள செயற்பாட்டு நிலையங்களுக்கு அனுப்பும் நீண்டகாலக் கொள்கையைக் கொண்டுள்ள அவுஸ்திரேலியா, அகதிகள் எனக் கருதுவோரை, பப்புவா நியூ கினியிலும் கம்போடியாவிலும் குடியேற்றுகின்ற போதும் அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X