Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவ்ரு தடுப்பு நிலையத்தில் தன்னை தீ மூட்டிக் கொண்ட ஈரானிய அகதியொருவர், பிறிஸ்பேர்ண் வைத்தியசாலையில் மரணமடைந்ததாக குடியேற்ற அமைச்சர் பீற்றர் டுற்றன் உறுதிப்படுத்தியுள்ளார்.
தனது உடம்பின் பெரும்பாலான பகுதிகள் எரிவடைந்த நிலையில், 23 வயதான ஈரானியரான ஒமிட், பிறிஸ்பேர்ண் வைத்தியசாலைக்கு நேற்று எடுத்து வரப்பட்டிருந்தார்.
இந்நிலையில், மரணமடைந்தவரின் மனைவிக்கும் நண்பர்களுக்கும் தகுந்த ஆதரவு வழங்கப்படும் என அறிக்கையொன்றில் டுற்றன் தெரிவித்துள்ளார்.
கன்பெராவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகவரகத்தின் பணியாளர்கள் (யு.என்.எச்.சி.ஆர்) விஜயம் செய்த நிலையிலேயே, நவ்ரு தடுப்பு நிலையத்துக்கு வெளியே ஒமிட், கடந்த புதன்கிழமை (27) தன்னை தீமூட்டியிருந்தார்.
நவ்ருவில் மூன்று வருடங்களாக இருக்கின்ற ஒமிட், யு.என்.எச்.சி.ஆர் பணியாளர்களுடனான சந்திப்பில் கோபத்துடனும் மன உளைச்சலுடனும் இருந்தே, தன்னை தீமூட்டியதாக தெரிவித்த அங்குள்ளவர்கள், ஒருவரும் உதவவில்லை என்றும் அம்புலன்ஸை அழைக்கவில்லையென்றும் பொலிஸாரை அழைத்து விட்டு ஓடியிருந்தனர் என்றும் மேலும் தெரிவித்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .