2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அதிக வெப்பத்தால் பாடசாலைகளுக்கு பூட்டு

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீள் அறிவித்தல் விடுக்கும் வரையில் வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து பாடசாலைகளும் நண்பகல் 12 மணியுடன் பூட்டப்பட வேண்டுமென மாகாண கல்விப் பணிப்பாளரினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மாகாணத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் ஈ.எம்.என்.டபிள்யூ.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அதிக வெப்பம் காரணமாக, பாடசாலை மாணவர்கள் பலர் மயங்கி விழுந்துள்ளனர். மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இன்று பிற்பகல் இரண்டு மணி வரையில், அநுராதபுரத்தில் 36 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன், பொலன்னறுவையில் 35 மற்றும் கொழும்பில் 33 பாகை செல்சியஸ் என பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னர், அநுராதபுரத்தில் 38 பாகை செல்சியஸாக வெப்பநிலை காணப்பட்டுள்ளது. இந்தளவுக்கு தற்போது வவுனியாவின் வெப்பநிலை காணப்படுகிறது. இந்நிலையில், வவுனியாவிலேயே, அதிக வெப்பநிலைப் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் 32 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X