Niroshini / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன், எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி – பரந்தன் பிரதேசத்திலுள்ள காணி ஒன்றிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
பரந்தன் சந்தியிலிருந்து முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான காணியிலிருந்தே இந்த வெடிபொருட்களை இராணுவம் கைப்பற்றியுள்ளது.
இதற்கமைய எல்.எம்.ஜே ரவைகள், மகசின் தோட்டாக்கள், துப்பாக்கியின் பாகங்கள், பழைய ஷெல் ஆகியவற்றை இராணுவம் மீட்டுள்ளது.
குறித்த காணியின் உரிமையாளரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது அறியமுடிகிறது.
இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .