2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இடர்முகாமைத்துவக் குழுக்கள் தெரிவு

Niroshini   / 2016 மே 01 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அனைத்துக் கிராம அலுவலர் பிரிவுகளிலும் இடர்முகாமைத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் துணுக்காய் அம்பலப்பெருமாள் குளம் கிராமத்தில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் இடர்முகாமைத்துவப் பிரிவினரால் இடர்முகாமைத்துவக் குழு கடந்த வாரம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு இடர்முகாமைத்துவ உத்தியோகத்தர்களான பி.சுந்தர், பி.சயந்தன், துணுக்காய் பிரதேச செயலகத்தின் இடர் நிவாரண உத்தியோகத்தர் சி.சிவரஞ்சினி, அம்பலப்பெருமாள்குளம் கிராம அலுவலர் எஸ்.நாகபாதம் ஆகியோர் கலந்துகொண்டு இடர்முகாமைத்துவக் குழுவை தெரிவுசெய்தனர்.

கிராம அலுவலரை தலைவராகக் கொண்டு இக்குழு இயங்கும்.

இக்கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலக இடர்முகாமைத்துவ உத்தியோகத்தர் பி.சுந்தர்,

“இடர்கள் ஏற்படுகின்றபோது எல்லோரும் இணைந்து செயற்பட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டும். அதனடிப்படையிலே மாவட்டத்தின் அனைத்துக் கிராம அலுவலர் பிரிவிலும் இடர்முகாமைத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைபற்று பிரதேச செயலாளர் பிரிவிலேயே கூடுதலான இடர்முகாமைத்துவக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

அம்பலப்பெருமாள்குள கிராமத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னர் 100  குடும்பங்கள் குடியமர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .