2024 மே 08, புதன்கிழமை

கிழக்கு மாகாணசபையில் உறுப்பினர்களின் புகைப்படங்கள் காட்சிக்கு வைப்பு

Princiya Dixci   / 2016 மே 01 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

நாடாளுமன்றத்தில் போன்று கிழக்கு மாகாண பேரவைச் செயலகத்திலும் அதன் உறுப்பினர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பேரவைச் செயலாளர் எம்.சீ.எம்.செரீப் முன்னெடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல், முதன்முதல் 2008ஆம் ஆண்டு நடைபெற்றது. இரண்டாவது தேர்தல் 2012ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த இரு தேர்தல்களிலும் வெற்றி பெற்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களாகத் தெரிவான மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த உறுப்பினர்களின் புகைப்படங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோல முதலாவது மற்றும் இரண்டாவது சபையின் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோரின் புகைப்படங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

இவற்றைவிட ஜனாதிபதி, பிரதமர், கிழக்கு மாகாணசபையில் பணிபுரிந்த ஆளுநர்கள், பிரதம செயலாளர்கள், பேரவைச் செயலாளர்கள் என 131 பேரின் புகைப்படங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

அடுத்த சபை அமர்வின் போது, தவிசாளர் சந்திரதாச கலப்பதி, முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மத் ஆகியோரினால் இவை திரை நீக்கம் செய்யப்படவுள்ளதாக பேரவைச் செயலாளர் எம்.சீ.எம்.செரீப் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X