2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

24 சம்பளத்தில் அதிகரிப்பின்றேல் போராட்டத்தில் குதிப்போம்: திகா

Kogilavani   / 2016 மே 02 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ, எஸ்.சுஜிதா

'பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம், எதிர்வரும் 24ஆம் திகதியன்று அதிகரிக்கப்படாவிடில், 25ஆம் திகதியன்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் குதிப்போம்' என்று மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரம் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் சர்வதேச தொழிலாளர் தினக்கூட்டம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) தலவாக்கலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தலவாக்கலை பஸ்தரிப்பிட சந்தியிலிருந்து சென்ற இந்த மே தினப் பேரணி, தலவாக்கலை விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தடைந்தது. 'மலையக தென்னிலங்கை தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுப்போம்' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ.இராதாகிருஷ்ணன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி.திகாம்பரம், ஜனநாயக மக்கள் முன்னினியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'நேரம் வரும் போது சம்பளம் அதிகரிக்கப்படும் என்று சிலர் தெரிவிக்கின்றனர். நாள் சம்பளத்தில் 100 ரூபாயை அதிகரிக்கும் படியே நாம் கோரியிருந்தோம். எனினும் அது நடப்பதாகத் தெரியவில்லை. மிகவும் பொறுமையாக இருந்துவிட்டோம். இம்மாத சம்பளத்தில் அதிகரிப்பு இருக்கவில்லையாயின் வேலைநிறுத்த பேராட்டத்தை நடத்துவோம்' என்று அவர் கூறினார்.

'தொழிலாளர்களின் பிள்ளைகளாகிய நாங்கள், அவர்களது உணர்வை புரிந்துக்கொண்டு, 7 பேர்ச் காணியில் தனி வீட்டுத்திட்டத்தை முன்னெடுக்கின்றோம். பல அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கின்றோம். எமது த.மு.கூ.யை உடைத்தெரிவதற்கு பலர் முயற்சித்து வருகின்றனர். அது ஒரு நாளும் நடக்காது' என்றும் அவர் இதன்போது உறுதியாகக் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், ஆர். ராஜாராம், சரஸ்வதி சிவகுரு, சிங்பொன்னையா, உதயகுமார் மற்றும் நுவரெலியா அம்பகமுவ பிரதேச சபைகளின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர் ட்ரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் புத்திரசிகாமணி  உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .