2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

1,000 ரூபாயை பாக்கெட்டில் வைப்பேன்: ஆறுமுகன்

Kogilavani   / 2016 மே 02 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

'இன்று தேயிலை விலை உலக சந்தியில் குறைவாக காணப்படுகிறது. இந்நேரத்தில் கம்பனிக்காரர்கள், 20 சதம், ஒரு ரூபாய் என்று சம்பளத்தை வழங்குவதற்கு முன்வருகின்றனர். இது அனைத்தையும் வைத்து எப்போது தாக்க முடியுமோ நான் அப்போது தாக்குவேன். உங்களுடைய பாக்கட்டில் 1,000 ரூபாயை வைப்பேன்' என்று நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

இ.தொ.க.வின் 77ஆவது மே தினக் கூட்டம் நுவரெலியா நகர மத்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும்  போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'இ.தொ.கா.வின் மே தினக் கூட்டத்துக்கு அலை அலையாக சுனாமி போன்று திரண்டு வந்து, இ.தொ.க.வுக்கு அங்கிகாரம் வழங்கிய மக்களுக்கான சம்பளப் பிரச்சினையை தீர்த்து வைப்பேன். நாடாளுமன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் பற்றி சிறு பிள்ளையும் அறிந்து வைத்திருக்கும். அவ்வாறிருக்கையில், தீகுளிக்கப்போவதாக, பெற்றோல் கேனுடன் ஒருவர் சென்றார். சிலர் 2,500 ரூபாய் பெற்றுத் தருவதாக கூறினார்கள். இன்று இவர்களின் நிலை என்ன?' என்று அவர் கேள்வியெழுப்பினார்.  

'எது எவ்வாறாக இருந்தாலும் ஆரம்பக்காலம் தொட்டு தொழிலாளர்களுக்கு சம்பளத்தை பெற்றுக்கொடுத்தது இ.தொ.கா தான். எனது மக்கள், எனக்கு அங்கிகாரம் வழங்கியுள்ளார்கள். காலம் பிறக்கும் போது அதனை பெற்றுக்கொடுப்பேன்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .