2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வைத்தியசாலையிலிருந்து வோஜஸ் விடுவிப்பு

Shanmugan Murugavel   / 2016 மே 02 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரரும் இங்கிலாந்துப் பிராந்திய அணியான மிடில்செக்ஸ் அணியின் தலைவருமான அடம் வோஜஸ், தலையில் பந்து பட்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து  விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

ஹம்ப்ஷையர் அணிக்கெதிரான பிராந்தியப் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போதே, அடம் வோஜஸின் தலையில் பந்து தாக்கியுள்ளது. எல்லைக்கோட்டிலிருந்து விக்கெட் காப்பாளரை நோக்கி, களத்தடுப்பாளரான ஒலி றேனெர் எறிந்த பந்து, விக்கெட் காப்பாளரைத் தாண்டி, அடம் வோஜஸின் தலையின் பிற்புறத்தைத் தாக்கியுள்ளது.

உடனடியாகவே நிலத்தில் வீழ்ந்த வோஜஸ், அணியினர் தங்கியிருக்கும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதோடு, பின்னர் அங்கும் குணமடைவதாக உணராததால், வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவர் வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போது இடம்பெற்றுவரும் போட்டியில் அவர் பங்குபற்றமாட்டார் என அறிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய அணியின் இளம் வீரரான பிலிப் ஹியூஸ், தலையில் பந்து தாக்கியதன் காரணமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, தலையில் பந்தால் தாக்கப்படுதலென்பது, முன்பைவிட அதிக கவனத்துடன் நோக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .