2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மென்பானங்கள் தொடர்பில் புதிய விதி

George   / 2016 மே 03 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மென்பானங்களில் சேர்க்கப்படும் சீனியின் அளவு குறித்த வர்ண லேபல் ஒட்டப்படுவது அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித  மஹிபால தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டாயமாக்கப்படும்.

1980ஆம் ஆண்டு இலக்கம் 26 உணவு சட்டத்தின் 32ஆவது பிரிவின் அடிப்படையில் இந்த புதிய விதி உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 100 மில்லிலீற்றர் இனிப்பு பானத்தில் 11 கிராமுக்கு அதிகளவில் சீனி சேர்த்திருந்தால் சிவப்பு வர்ண லேபலும் 2 கிராம் தொடக்கம் 11 கிராம் அளவிலான சீனி சேர்த்திருந்தால் மஞ்சல் வர்ண லேபலும் 2 கிராமுக்கு குறைவான சீனி சேர்த்திருந்தால் பச்சை வர்ண லேபலும் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.

அத்துடன், சேர்க்கப்பட்ட சீனியின் அளவு குறித்து மூன்று மொழிகளிலும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

காபனைட் அடங்கிய பானங்கள், உடனடி பானங்கள், நெக்டோ வகைகள், பழசாறு வகைகள் உட்பட் சகல மென்பான வகைகளும் இந்த புதிய விதிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .