2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

'ஊடகங்கள் பக்கசார்பற்றமுறையில் செயற்படவேண்டும்'

Niroshini   / 2016 மே 03 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.நிரோஷினி

அரசியல் அமைப்பு சட்டம் நாட்டின்  எதிர்காலத்துக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும். அந்தவகையில், அரசியல் அமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த ஊடகங்கள் பக்கசார்பற்றமுறையில் செயற்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஊடக மறுசீரமைப்பு தொடர்பான ஆய்வு முடிவின் இறுதி அறிக்கை, இன்று செவ்வாய்க்கிழமை லக்ஷமன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் வைத்து வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஆட்சி மாற்றத்தின் பின்னரும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக விசாரணைகயோ சட்ட நடவடிக்கைகளோ எடுக்கவில்லை. எந்தவொரு நாட்டில் ஜநனாயகம் தலைத்தோங்குகிறதோ, அங்குதான் ஊடக சுதந்திரம் காணப்படும். ஊடகம்தான் சமூகத்தின் தூண் ஆகும்.

நாங்கள் புதிய அரசியல் அமைப்பை கொண்டுவர உத்தேசித்துள்ளோம். இது சமூகத்தின் தேவையை நிறைவேற்றுவதாக அமையும். அந்தவகையில், அரசியல் அமைப்பில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு ஊடகங்கள் பங்களிக்க வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .