2025 டிசெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

சிம்பாப்வே செல்கிறது இந்தியா

Shanmugan Murugavel   / 2016 மே 04 , மு.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், மூன்று இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடருக்காக எதிர்வரும் ஜூன் மாதம் சிம்பாப்வேக்கு இந்தியா செல்கிறது. இது, கடந்த ஆறு ஆண்டுகளில் நான்காவது முறையாக இந்தியா, சிம்பாப்வேக்கு செல்லும் தருணமாகும்.

மேற்படி போட்டிகள் யாவும் ஹராரே விளையாட்டுக் கழக மைதானத்தில் 12 நாட்களுக்குள் இடம்பெறவுள்ளன. முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி, ஜூன் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் இறுதி இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஜூன் 22ஆம் இடம்பெறவுள்ளது.

எதிர்கால சுற்றுப்பயணங்களுக்கான திட்டத்தின்படி இரண்டு அணிகளும் ஒரு டெஸ்ட் போட்டியொன்றை விளையாட வேண்டுமென்ற நிலையில், மூன்று இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளால் டெஸ்ட் போட்டி பிரதீயீடு செய்யப்பட்டுள்ளது.

இறுதியாக, 2015ஆம் ஆண்டு ஜூலையில் சிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை 3-0 என்ற ரீதியில் வென்றதுடன், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை 1-1 என்ற ரீதியில் சமநிலையில் முடித்துக் கொண்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X