2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

'நியூசிலாந்து அணிக்கு நஞ்சூட்டப்பட்டது'

Shanmugan Murugavel   / 2016 மே 05 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

1995ஆம் ஆண்டு இடம்பெற்ற றக்பி உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னதாக, நியூசிலாந்து அணி வீரர்களுக்கு நஞ்சூட்டப்பட்டதாக, நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மெய்ப்பாதுகாவலரொருவர் தெரிவித்துள்ளார். சர்ச்சைகளை ஏற்படுத்திய இந்தப் போட்டி தொடர்பாக, இது மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இறுதிப் போட்டியில், ஜோனா லொமு தலைமையிலான நியூசிலாந்து அணி, அதிக வெற்றிவாய்ப்புகளைக் கொண்ட அணியாகக் களமிறங்கியிருந்தது. ஆனால், இறுதிப் போட்டியில் வைத்து தென்னாபிரிக்காவிடம் 12-15 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்திருந்தது.

இறுதிப் போட்டிக்கு 48 மணிநேரங்கள் முன்னதாக, நியூசிலாந்து அணி வீரர்களில் பலர், உணவு நஞ்சானதன் காரணமாகப் பாதிக்கப்பட்டதால், முழுமையான திறமையை வெளிப்படுத்த முடியாமல் போயிருந்தது. உணவு நஞ்சானமைக்கான காரணங்கள் குறித்து, தொடர்ச்சியாக விவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள, நியூசிலாந்து அணிக்குப் பாதுகாப்பு உத்தியோகத்தராக அப்போது கடமையாற்றியிருந்த, நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மெய்ப்பாதுகாவலரான ரோறி ஸ்டெய்ன் என்பவர், 'நான் பார்த்ததை நான் அறிவேன். மிக மிக நோய்வாய்ப்பட்டு, வீரர்கள் குழாமொன்று, நிலத்தில் காணப்பட்டனர். அது உணவால் ஏற்பட்ட நஞ்சூட்டல் அன்று. மாறாக, அது கோப்பி அல்லது தேநீர் மூலமாகவே ஏற்படுத்தப்பட்டது. சிலவேளைகளில், குடிநீரால் கூட இருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார். அப்போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றிபெறுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பணத்தை வெல்வதற்காக, சூதாடிகளால் இது மேற்கொள்ளப்பட்டதாகத் தான் நினைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .