2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

ஆனந்தபுரம், இரணைப்பாலை கிராமங்கள் உவரடைகின்றன

Suganthini Ratnam   / 2016 மே 06 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பின் ஆனந்தபுரம், இரணைப்பாலை கிராமங்கள் உவர் அடைந்து வருவதன் காரணமாக இக்கிராமங்களிலுள்ள குடிநீர்க் கிணறுகள் உவர் நீராக மாறி வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் இக்கிராமத்தில் வாழ்கின்ற குடும்பங்கள் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளன.

மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய கிராமங்களுக்கும் ஆனந்தபுரம், இரணைப்பாலை ஆகிய கிராமங்களுக்கும் இடையில் காணப்படுகின்ற சதுப்புநில உவராறு மழைக்காலங்களில் பெருக்கெடுத்து பரவுவதன் காரணமாகவே ஆனந்தபுரம், இரணைப்பாலை ஆகிய கிராமங்கள் உவர் அடைந்து வருகின்றன.

உவர் பரம்பலைத் தடுப்பதற்கு அணைகள் அமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள கிராமங்களின் அபிவிருத்திச் சங்கங்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

உவர் பரம்பலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் ஆனந்தபுரம், இரணைப்பாலை ஆகிய இரு கிராமங்களும் முழுமையாக உவர் அடையக்கூடிய அபாய நிலை காணப்படுவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X