உடற் பயிற்சியின் முக்கியத்துவம்
06-05-2016 10:29 AM
Comments - 0       Views - 898

எமது வாழ்வில் உடற்பயிற்சி என்பது மிகவும் இன்றியமையாதது என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமே. ஆனால், நாம் ஏன், எதற்காக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதன் சரியான காரணத்தை பலர் அறியாமல் இருக்கின்றோம்.

இன்று உடற்பயிற்சி என்பது உடல் எடையைக் குறைப்பதற்கான பயிற்சி என்று மட்டும் எண்ணியே பலர் செய்து கொண்டிருப்பது கண்கூடு. உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டுமான பயிற்சி அல்ல. உடற்பயிற்சி உடலினுடையதும் உள்ளத்தினதும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சி.

உடற்பயிற்சி உடல் எடையைக் குறைப்பதற்கு மட்டுமல்ல, உடலில் பல நோய்கள் வராமல் தடுப்பதற்கான பயிற்சி. உடலைக் கட்டமைப்பு ரீதியிலும், தொழிற்பாட்டு ரீதியிலும் பலப்படுத்துவதற்கான பயிற்சி. இவ்வாறு பலவிதமாக உடற்பயிற்சியையும் அதன் முக்கியத்துவத்தையும்பற்றிக் கூறிக்கொண்டே போகலாம்.

உடற்பயிற்சியால் கிடைக்கும் அனுகூலங்கள்:

உடற்பயிற்சியானது உடலின் சக்தியின் (Energy) அளவை அதிகரிக்கின்றது.   உடலின் உறுதியை அதிகரிக்கின்றது. மனித வன்கூட்டுத் தொகுதியில்; தாங்கும் தன்மையை அதிகரிக்கின்றது. என்பு, தசைகளை பலம்மிக்கதாக மாற்ற உதவுகிறது.

உடற்பயிற்சி எமது உடலின் நிறையை உயரத்துக்கேற்ற விதத்தில் பேண உதவுகிறது.

மனித உடலில் காணப்படுகின்ற LDL(Low Density Lipoprotein) எனும் உடலுக்குத் தீங்கான கொழுப்புக்களின் அளவைக் குறைத்து u;DL(u;igh Density Lipoprotein) எனப்படும் உடலுக்கு நன்மை பயக்கின்ற இலிப்பிட்டுக்களின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

உடற்பயிற்சியின்போது நாம் உண்ணும் உணவின் மூலம் கிடைக்கின்ற மேலதிகமான கலோரி (சக்தியின் அளவு) பாவனைக்கு உட்படுத்தப்படுகிறது. இதனால், தேவையற்ற கொழுப்புக்கள் உடலில் தேக்கமடைவதும் குருதியைக் கொண்டு செல்கின்ற நாடிகளில் ஏற்படுத்தப்படும் கொலஸ்ட்ரோல் படிவு உருவாதலும் தடுக்கப்படுகிறது.

உடற்பயிற்சி, இதயத் தொழிற்பாட்டை சீராகப் பேண உதவுகிறது. இதன்மூலம் இதயத் தசைகள் வலுடைவதால் உயர் குருதியமுக்கம், மாரடைப்பு, இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவடைகின்றன.

உடற்பயிற்சி, மூளையின் சுறுசுறுப்பை அதிகரிக்கின்றது. இதன்மூலம், மூளைக்குச் செல்கின்ற இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிப்பதால் மூளையின் ஆரோக்கியத்துக்கு தேவையான ஒட்சிசன் மற்றும் போசணைப் பதார்த்தங்களின் விநியோகம் துரிதமாக அதிகரிக்கின்றது. இதனால் மூளையின் கலங்கள் புத்துயிர்ப்படைந்து சுறுசுறுப்பாகச் செயற்படுகின்றன.

உடற்பயிற்சி, சில ஓமோன்களின் சுரப்பை துரிதப்படுத்துவதால் ஞாபக சக்தி, கற்கும் ஆற்றல் போன்றன அதிகரிக்கின்றன. அத்தோடு, இத்தகைய ஓமோன்கள் Alzeihmers disease போன்ற கிரகித்தலுடன் தொடர்புடைய நோய்கள் ஏற்படாமலும் தடுக்கின்றது.

வழமையான உடற்பயிற்சி IIஆம் வகை நீரிழிவு நோய் (Type-II Diabetes) வராமல் தடுக்கின்றது. வழக்கமான உடற்பயிற்சி, குருதிக் குளுக்கோசு மட்டத்தை சீர்செய்வதால் இது நீரிழிவு நோய்வராமல் தடுக்க உதவுகிறது. அத்துடன், ழுடிநளவைல எனப்படும் அதிக உடற்பருமனுடைய தோற்றம் வராமல்  இருக்க உடற்பயிற்சி உதவுகிறது.

உடற்பயிற்சி எமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, நிர்ப்பீடணத் தொகுதியின் தொழிற்பாட்டை அதிகரிக்கின்றது. இது உடலினுள் புகும் தீங்கான பக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவற்றுக்கு எதிராக பிறபொருளெதிரிகளை (Antibodies) உருவாக்கி அவற்றை ஓரிடப்படுத்தி அழிக்கும் செயற்பாட்டை ஊக்குவிக்கின்றன.

உடற்பயிற்சி சிலவகையான புற்றுநோய்களின் விருத்தியைக் குறைப்பதற்கு உதவுகிறது. சிலவகையான குடல்புற்றுநோய், சில நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கவும் உடற்பயிற்சி உதவுகின்றது.

நிம்மதியான உறக்கத்துக்கு உதவுகின்றது. இன்று பலர் நித்திரைக் குழப்பத்தால் பல்வேறு வியாதிகளுக்கும் மன நோய்களுக்கும் உள்ளாகி வருகின்றார்கள். உடற்பயிற்சியின் மூலம் சில ஓமோன்கள் சிறப்பாகத் தொழிற்படுவதால் நித்திரை என்பது சுலபமாகவே வருகிறது. நித்திரையின்மைக்கு பல தேவையற்ற மாத்திரைகளைப் பாவித்து உடம்பைக் கெடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை. உடற்பயிற்சி இதற்கு சிறப்பான மருந்தாகும்.

உடற்பயிற்சி சில மன நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. உடற்பயிற்சி உடலுக்கும் உள்ளத்துக்கும் மகிழ்ச்சியையும் புத்துணர்சச்சியையும் ஏற்படுத்துவதால் இது, பல மன நோய்களை குணப்படுத்த உதவுகிறது. இது மனவழுத்தத்துக்கு (Stress and Depression) காரணமான ஓமோன்களின் சுரப்புக்களைக் கட்டுப்படுத்தி மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது.

உடற்பயிற்சி விரைவாக முதுமைத் தோற்றம் அடைவதைக் கட்டுப்படுத்துகிறது. இது உடலின் ஓர்சீர்த்திட நிலையைப் பேணும் தொகுதியின் சிறப்பான தொழிற்பாட்டால் கலங்கள் விரைவாக வயதாவது குறைக்கப்படுகிறது.

மூட்டுக்கள், தசைகள் போன்றவற்றின் நெகிழும் தன்மையை (Flexibility) அதிகரிக்கின்றது.
உடற்பயிற்சி செய்வதற்கான நேரம்

அதிகாலையில் செய்யும் உடற்பயிற்சியே உடலுக்கு புத்துணர்வை தருகின்றது. அன்றைய நாளையும் மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றது. உடல் வியர்க்குமளவுக்கு செய்யும் உடற்பயிற்சியானது இரவில் நிம்மதியான உறக்கத்துக்கு வழிவகுக்கின்றது.

காலை நேர உடற்பயிற்சியானது தோளையும் முகத்தையும் புத்துணர்வுடன் வைக்க உதவுகின்றது. இயந்திரமாகிபோன மக்களது வாழ்க்கை நேர அட்டவணையில் இடைவேளை என்பது இருக்காதுதான். ஆனால், நாம் உழைக்கும் உழைப்பு அனைத்தையும் எதிர்காலத்தில் நோய்களுக்காகவும் மருத்துவத்துக்காகவும் செலவிடுவதை தவிர்ப்பதற்காகவேனும் காலை நேர உடற்பயிற்சிக்கான நேரத்தை ஒதுக்குவது சிறந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஏனெனில், அதிகாலையை தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் நாம் ஏதோ ஒரு வேலையைச் செய்துகொண்டுதான் இருக்கின்றோம். அதனால், உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் என்பது இருக்காது. ஆனால், அதிகாலையில் வேலைகள் அதிகம் இருக்காது. இதனால், உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ற நேரமாக காலை வேளையை மாற்றிக்கொள்வது சிறந்தது.

சூழலில் ஒட்சிசனின் அளவானது மற்ற நேரங்களைவிட அதிகாலையில் அதிகம் கிடைப்பதால் அது எமது உடலுக்கு ஆரோக்கியமாக அமைகின்றது.

உடற்பயிற்சியின் போது தவிர்க்க வேண்டியவை:

அதிகாலையில் நாம் உடற்பயிற்சி செய்யும்போது தேநீர் அருந்துவது மற்றும் உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

சீஸ், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், கடைகளில் பொதி செய்து விற்பனை செய்யப்படும் தானியங்கள், பாண்;, பழச்சாறு, முட்டை, மில்க்ஷேக் உள்ளிட்ட உணவுப் பண்டங்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டிய நேரங்கள்:

உடல்நலக் குறைவின்போது.

சிறிய தலைவலி, காய்ச்சல், சளி அதிகரித்திருக்கும்போது.

களைப்பாக இருக்கும்போது.

முதல்நாள் இரவு அதிகம் மது அருந்தியிருந்தால் அடுத்த நாள் காலை உடற்பயிற்சி செய்வதை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.

முறையாக நித்திரைகொள்ளாமல் இருக்கும்போது.

எனவே, சரியான உடற்பயிற்சிகளை ஓர் இயன் மருத்துவரோடு கலந்தாலோசித்து உங்களினுடைய உடலின் தன்மைக்;கு ஏற்ப பொருத்தமான கால இடைவெளிகளில் பின்பற்றி நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வீராக...

"உடற் பயிற்சியின் முக்கியத்துவம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty