2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

பிறீமியர் லீக்கில் 'பெரிய 4 அணிகளின் ஆதிக்கம் முடிந்தது'

Shanmugan Murugavel   / 2016 மே 08 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரில் வழக்கமாக ஆதிக்கம் செலுத்தும் பெரிய அணிகளெனக் கருதப்படும் நான்கு அணிகளின் ஆதிக்கம், முடிவுக்கு வந்துவிடும் என, ஆர்சனல் அணியின் பயிற்றுநர் ஆர்சீன் வெங்கர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரின் சம்பியன்களாக லெய்செஸ்டர் சிற்றி அணி தெரிவாகியுள்ளதோடு, ஏனைய அணிகள், வழக்கமான திறமையை வெளிப்படுத்தத் தடுமாறியிருந்தன.

பிறீமியர் லீக்கின் பெரிய நான்கு அணிகளென, மன்செஸ்டர் யுனைட்டெட், லிவர்பூல், செல்சி, ஆர்சனல் ஆகியன கருதப்படுகின்றன. இவ்வணிகள், 2000களில் அதிக ஆதிக்கத்தை வெளிப்படுத்திய அணிகளான உள்ளன.

இந்நிலையிலேயே கருத்துத் தெரிவித்துள்ள வெங்கர், தொலைக்காட்சி உரிமம் காரணமாக ஏராளமான பணம், லீக்குக்குள் வருவதன் காரணமாக, அனைத்து அணிகளும் பலமாக மாறுவதற்கான நிலை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில ஆண்டுகள், இங்கிலாந்திலுள்ள திறமைகள், அதிக சமமான அளவில் பகிரப்படுமெனத் தெரிவித்த அவர், இனிவரும் காலங்களில், இன்னும் அதிகமான ஆச்சரியங்கள் கிடைக்கப்பெறுமெனத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X