Kanagaraj / 2016 மே 10 , மு.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான இராணுவப் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார் என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சேவை சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
நாரஹேன்பிட்டிய, அபயராம விஹாரையில் நேற்றுத் திங்கட்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
'முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக் குறைக்கப்பட்ட விடயம் தொடர்பில், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறு நான், கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தேன். அக்கடித்ததுக்குச் சாதகமான பதில் கிடைத்துள்ளது.
நான், அனுப்பிய கடிதத்துக்கு 48 மணிநேரத்தில் பதில் கிடைத்துள்ளது. ஆகையால், எதிர்வரும் 16ஆம் திகதியன்று 1,500 தேரர்கள் வீதிக்கு இறங்குவதற்கு ஏற்கெனவே எடுத்திருந்த தீர்மானத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்திக்கொண்டனர்' எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான பேச்சுவார்த்தை, வெசாக் வாரத்துக்குப் பின்னர் இடம்பெறும் என்றும் தேரர் மேலும் கூறினார். ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றியளிக்காவிடின், ஏற்கெனவே எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, தேரர்களை வீதியில் இறக்கி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .