2026 ஜனவரி 17, சனிக்கிழமை

கசிப்பு உற்பத்தியால் நாசமாகும் ஊர்கள்

Princiya Dixci   / 2016 மே 11 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன் 

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருமுறிகண்டி, இந்துபுரம் மற்றும் வசந்தநகர் ஆகிய பகுதிகளில் தற்போது கசிப்பு காய்ச்சுதலும் விற்பனை செய்தலும் அதிகரித்துக் காணப்படுகின்றன. 

இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேற்படி கிராமங்களில், என்றுமில்லாதவாறு தற்போது கசிப்பு காய்ச்சி, விற்பனை செய்யும் நடவடிக்கைகளும் போதைப்பொருள் பாவனைகளும் அதிகரித்துள்ளன. 

சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்க வேண்டிய மதுவரித்திணைக்களம் கிளிநொச்சியில் இயங்குவதனாலும், பொலிஸ் நிலையம் 25 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மாங்குளம் பகுதியிலும் அமைந்திருப்பதால், உரிய அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்து, அவர்கள் வருவதற்கு முன்னர் குற்றவாளிகள் தப்பிச் சென்றுவிடுகின்றனர். 

சிறுவர்கள், இளவயதுடையவர்கள் போதைப்பொருட்களுக்கு அதிகளவு அடிமையாகும் நிலை காணப்படுகின்றது. அத்துடன், புதியவர்களின் நடமாட்டத்தால் பல்வேறு குற்றச்செயல்கள் ஏற்படுகின்றன என மக்கள் தெரிவித்தனர். 

இதனால், திருமுறிகண்டிப் பகுதியில் பொலிஸ் உப அலுவலகம் ஒன்றை அமைத்து இக்கிராமங்களில் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X