Shanmugan Murugavel / 2016 மே 12 , பி.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஐஸ் ஹொக்கியில் தனது திறமைகளை வெளிக்காட்டினார். 2014ஆம் ஆண்டு சோச்சி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற்ற மைதானமொன்றில் இடம்பெற்ற சிநேகபூர்வப் போட்டியொன்றிலேயே, அவர் இவ்வாறு சிறப்பான திறமையை வெளிக்காட்டினார்.
அதிகாரிகள், வணிகர்கள், முன்னாள் வீரர்கள் உள்ளடங்கிய அணியை வழிநடத்திய புட்டின், தொழில்முறையல்லாத வீரர்கள் அடங்கிய அணிக்கெதிராக இப்போட்டியில் விளையாடியிருந்தார். இப்போட்டியில், புட்டினின் அணி, 9-5 என்ற கணக்கில் வெற்றிபெற்றிருந்தது.
சிவப்பு நிற ஜேர்சியை அணிந்திருந்த புட்டின், கோல் பெறுவதற்கான இரண்டு உதவிகளை வழங்கியிருந்தார். அவரது ஜேர்சியின் பின்புறத்தில் 11ஆம் இலக்கத்தை அவர் பதித்திருந்தார். 63 வயதான புட்டின், தனது அணி வீரர்களுடன் இணைந்து கொண்டாடியதோடு, அங்கு கூடியிருந்த மக்களோடும் இணைந்து பழகியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .