Shanmugan Murugavel / 2016 மே 13 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேலினால் இந்த வாரம் சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயர் ஹிஸ்புல்லா தளபதியான முஸ்தபா பட்ரெட்டினே கொல்லப்பட்டதாக லெபனானிய ஷியா குழுவான ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
1982ஆம் ஆண்டு தொடக்கம், இஸ்லாமிய தடுப்பாற்றலின் பெரும்பாலான நடவடிக்கையில் பட்ரெட்டினே பங்கேற்றதாக, அவரின் மரணத்தை அறிவிக்கும் இன்று வெள்ளிக்கிழமை (13) வெளியான அறிக்கையில் தெரிவித்துள்ள ஹிஸ்புல்லா, அவரை சிறந்த ஜிஹாதி தலைவராக வர்ணித்துள்ளது.
55 வயதான பட்ரெட்டினே, ஹிஸ்புல்லாவின் உயர் மட்ட அதிகாரி என்பதோடு, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டோடு இணைந்து மோதலில் ஈடுபடும் ஹிஸ்புல்லாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவர் என்றும் ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.
சிரியத் தலைநகர் டமஸ்கஸ்ஸுக்கு அருகிலுள்ள தமது தளமொன்றை கடந்த செவ்வாய்க்கிழமை (10) இலக்கு வைத்த தாக்குதலிலேயே அவர் கொல்லப்பட்டதாக வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர, எவ்விதமான தாக்குதலால் மரணம் நிகழ்ந்தது என கண்டறிய பணியாற்றுவதாகவும், அதாவது வான் தாக்குதலா அல்லது ஏவுகணைத் தாக்குதலா அல்லது ஆட்டிலறி தாக்குதலா என கண்டறிய பணியாற்றுவதாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தாம் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை என இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் பெண்மணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .