Thipaan / 2016 மே 14 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி புளியம்பொக்கணை ஆற்றுப்பகுதியில், பொலித்தீன் பையில் சுற்றப்பட்;டு சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் தாய் என சந்தேகிக்கப்படும் பெண்ணை, எதிர்வரும் 27ஆம் திகதி வரையும் விளக்கமறியிலில் வைக்குமாறு ,கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, வெள்ளிக்கிழமை (13) உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 8ஆம்திகதி, கிளிநொச்சி புளியம்பொக்கணை ஆற்றுப்பகுதியில் பொலித்தீன் பை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் சிசு ஒன்றின் சடலம் இருப்பதாக பொதுமக்கள் வழங்கிய தகவைலத்தொடர்ந்து சம்பவ இடததுக்கு சென்ற தர்மபுரம் பொலிஸார் சடலத்தை மீட்டனர்.
இது தொடர்;பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் தாயென சந்தேகிக்கும் பெண்ணொருவரைக் கைது செய்து, கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதித்திருந்ததுடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக அறிக்கையினை வெள்ளிக்கிழமை (13) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் சமர்பித்தனர்.
இதனையடுத்து குறித்த சந்தேக நபரை கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு நேரடியாக சென்று பார்வையிட்ட நீதவான் மேற்படி சந்தேநபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பெண் வள்ளிபுனம் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாய் என்றும் இவரது கணவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகவும், தற்போது சிவில்பாதுகாப்பு திணைக்களத்தின் படையாளியாகக் கடமையாற்றி வருவதுடன் கடமை நிமிர்த்தம் இராமநாதபுரம் பகுதியில் தங்கியிருந்தபோதே இவ்வாறு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில்; இருந்து தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .