Niroshini / 2016 மே 15 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்லவேண்டாமென முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் இடர்முகாமைத்துவப் பிரிவு சனிக்கிழமை (14) மாலை அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா ஊடாக சகல கடற்றொழிலாளர்களுக்கும் இது தொடர்பில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தீவின் கடற்பரப்பில் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் என்று வளிமண்டலத் திணைக்களம் விடுத்த அறிவித்தலுக்கமையவே, முல்லைத்தீவு மாவட்ட இடர்முகாமைத்துவப் பிரிவினால் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு இவ் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .