2026 பெப்ரவரி 19, வியாழக்கிழமை

புண்டெஸ்லீகா தொடர்: வெற்றியுடன் நிறைவுசெய்த பயேர்ண் மியூனிச்

Shanmugan Murugavel   / 2016 மே 15 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனி கால்பந்தாட்டத் தொடரான புண்டெஸ்லீகாவின் இறுதி லீக் போட்டியில் வெற்றிபெற்ற அந்த லீக்கின் சம்பியன்களான பயேர்ண் மியூனிச், அவ்வணியின் பயிற்றுநரான பெப் கார்டியோலாவின் இறுதிப் போட்டியை, வெற்றியுடன் முடித்தது.

இப்போட்டிக்கு முன்னதாக சம்பியன்களாகத் தெரிவாகியிருந்த பயேர்ண் மியூனிச் சார்பாக, றொபேர்ட் லெவன்டொவ்ஸ்கி ஒரு கோலையும் கோட்ஸே 2 கோல்களையும் பெற்றுக் கொடுக்க, எதிரணியான ஹன்னோவெர் அணி தடுமாறியது. அவ்வணியால், ஒரேயொரு கோலையே பெற இயலுமாக அமைய, 3-1 என்ற கோல் கணக்கில் அவ்வணி வெற்றிபெற்றது.

இதன்படி, போட்டிக்கான புள்ளி அட்டவணையில், இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்ட பொறிஸ்ஸா டோர்ட்முன்ட் அணியை விட 10 புள்ளிகள் அதிகமாகப் பெற்ற பயேர்ண் மியூனிச், 88 புள்ளிகளுடன் இத்தொடரை நிறைவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம், 53 தடவைகள் இடம்பெற்றுள்ள இத்தொடரில், 25 தடவைகள் வெற்றிபெற்றுள்ள பயேர்ண் மியூனிச் அணி, இத்தொடரில் அசைக்க முடியாத அணியாகத் தொடர்ந்தும் வலம்வருகிறது.

இதனைத் தவிர, இம்முறை தொடரில் சிறப்பாக விளையாடி, 30 கோல்களைப் பெற்ற றொபேர்ட் லெவன்டொவ்ஸ்கி, இத்தொடரின் கடந்த 39 ஆண்டுகால வரலாற்றில், பருவகாலமொன்றில் 30 கோல்களைப் பெற்ற முதலாவது வீரராக மாறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .