Shanmugan Murugavel / 2016 மே 16 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வந்த பிறீமியர் லீக்கின் இறுதி நாள் ஆட்டங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிலையில், மன்செஸ்டர் சிற்றியின் சம்பியன்ஸ் லீக் தகுதி ஏறத்தாள உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்துடன் ஆர்சனல் முடித்துக் கொண்டது.
மன்செஸ்டர் சிற்றி, சுவான்சீ சிற்றி அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்று போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் 66 புள்ளிகளைப் பெற்று மன்செஸ்டர் சிற்றி நான்காமிடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று பௌர்ண்மௌத் உடனான போட்டியில் 19-0 என்ற கோல்கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வெற்றி பெற்றாலே அவ்வணி சம்பியன்ஸ் லீக்குக்கு தகுதி பெறமுடியும்.
மறுகணத்தில், அடுத் பருவகாலத்துக்கான பிறீமியர் லீக்கிலிருந்து வெளியேற்றப்பட்டுள நியூகாசிலிடம் 5-1 என்ற கோல்கணக்கில் டொட்டென்ஹாம் தோல்வியடைய, 4-0 என்ற கோல்கணக்கில் அஸ்டன் வில்லாவை தோற்கடித்த ஆர்சனல், 2005ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறீமியர் லீக்கில் இரண்டாமிடத்தைப் பிடித்தது.
தவிர, இந்தப் பருவகாலத்தின் தமது இறுதி பிறீமியர் லீக் போட்டியில் கடந்த பருவகால சம்பியன்களான செல்சியைச் சந்தித்த லெய்செஸ்டர் சிற்றி, 1-1 என்ற கோல்கணக்கில் போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.
இதேவேளை இடம்பெற்ற ஏனைய போட்டிகளில், லிவர்பூல், வெஸ்ட் புரோம் அணிகளுக்கிடையிலான போட்டி 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலையில் முடிவடைந்ததோடு, வட்போர்ட், சந்தர்லேண்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் 2-2 என்ற கோல்கணக்கில் சமநிலையில் முடிவடைந்ததோடு, வெஸ்ட் ஹாமை 1-2 என்ற கோல்கணக்கில் ஸ்டோக் தோற்கடித்ததுடன், கிறிஸ்டல் பலஸை 1-4 என்ற கோல்கணக்கில் சௌதாம்டன் தோற்கடித்ததுடன், நோர்விச்சை 0-3 என்ற கோல்கணக்கில் எவெர்ற்றன் தோற்கடித்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .