2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

‘ஷரபோவா மீண்டும் விளையாட முடியாமல் போகலாம்’

Shanmugan Murugavel   / 2016 மே 20 , மு.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊக்கமருந்துச் சோதனையில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்து, ஐந்து கிரான்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ரஷ்ய வீராங்கனையான மரியா ஷரபோவா, இனி மேல் மீண்டும் விளையாட முடியாமல் போகலாம் என ரஷ்யா டென்னிஸ் சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரியில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடரிலேயே 29 வயதான ஷரபோவா மெல்டோனியத்தை பயன்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஷரபோவா, இனியும் தொடர்களில் விளையாடுவாரா என்று வினவப்பட்டபோது, அது மிகவும் சந்தேகம், ஷரபோவா மோசமான நிலைமையில் இருப்பதாக ரஷ்ய டென்னிஸ் சம்மேளன தலைவர் ஷமில் தர்பிஷ்ஷெவ் தெரிவித்துள்ளார். மீண்டும் டென்னிஸ் விளையாடுவதில் உறுதியாக இருப்பதாக ஷரபோவா கடந்த மார்ச் மாதம் தெரிவித்திருந்தார்.

சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தால் கடந்த மார்ச் 12ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ள ஷரபோவா, தனது முழுமையான தண்டனையை எதிர்பார்த்துள்ளார். இத்தடையானது அதிகபட்சமாக நான்கு ஆண்டுகளாக இருக்கும் என்ற போதும், ஷரபோவாக்கு ஆறு மாதம் அல்லது பன்னிரண்டு மாதத் தடையே அதிகமாகக் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனெனில், மெல்டோனியம் எவ்வளவு காலத்துக்கு உடலில் தங்கியிருக்கும் என விஞ்ஞானிகள் தெளிவில்லாமல் உள்ளதாக உலக ஊக்கமருந்துக்கெதிரான கூட்டமைப்பு தெரிவித்திருந்ததுடன், ஜனவரிக்கு முதலாம் திகதிக்கு முன்னர் மெல்டோனியம்ந உள்ளெடுப்பதை நிறுத்தி, மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் மெல்டோனியம் உள்ளெடுத்ததாக சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் தடைகளிலிருந்து தப்பிக்க முடியும் எனத் தெரிவித்திருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .