Shanmugan Murugavel / 2016 மே 23 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்செஸ்டர் யுனைட்டெட் கழகத்தின் முகாமையாளர் லூயிஸ் வான் கால், அப்பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அக்கழகம், உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்தது. அவர் நீக்கப்படும் செய்தி, கடந்த சனிக்கிழமையிலிருந்து வெளிவந்த நிலையிலேயே, தற்போது உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அவரது இடத்துக்கு, செல்சி அணியின் முன்னாள் முகாமையாளரான ஜொஸ் மொரின்ஹோ, நாளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்.ஏ கிண்ணத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட் அணியைச் சம்பியன் ஆக்கிய பின்னரே, வான் கால் பதவி விலக்கப்பட்டுள்ளார். சம்பியன்ஸ் லீக் தொடருக்குத் தெரிவாகாமை உட்பட, கழகத்தின் அண்மைக்காலப் பெறுபேறுகளில் திருப்தியடையாமை காரணமாகவே, அவரைப் பதவியிலிருந்து அகற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .