2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சக்கரக்கதிரைகளிலேயே தங்கத்தை கடத்த முயற்சி

Kanagaraj   / 2016 மே 23 , பி.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

10.5 கிலோகிராம் நிறையுடைய தங்கத்தை நாட்டுக்குள் கடத்திவர முற்பட்ட பெண்கள் மூவரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, சுங்கப் பிரிவு அதிகாரிகள், நேற்றுத் திங்கட்கிழமை (23) அதிகாலை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கடத்திவரப்பட்ட தங்கத்தின் பெறுமதி 60 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

டுபாயிலிருந்து இலங்கை வந்த விமானமொன்றிலேயே, மேற்படி மூன்று பெண்களும் வருகை தந்துள்ளனர். கொழும்பு பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இந்த மூவரும் 40-50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று அறியமுடிகின்றது.
அதிலொருவர், வெளிநாட்டுக்கு முதன்முறையாக சென்று திரும்பியுள்ளார் என்றும் மற்றைய இருவரும் அடிக்கடி சென்றுவருபவர்கள் என்றும் அறியமுடிகின்றது.
 

கைப்பற்றப்பட்ட தங்கத்தில், 4 கிலோகிராம் தங்க பிஸ்கட்டுகள், தங்கச்சங்கிலி, வளையல்கள் மற்றும் பெண்டன் ஆகியனவும் அடங்குகின்றன என்று சுங்கத் திணைக்கள அதிகாரிகள தெரிவித்தனர்.

தங்களுடைய பயணப் பொதிகளுக்குள் தங்கத்தை, இரண்டு பெண்கள் மறைத்து வைத்துக்கொண்டு இரண்டு சக்கரக்கதிரைகளின் அமர்ந்துகொண்டுள்ளனர். மற்றையபெண், அவ்விருவரும் அமர்ந்திருந்த சக்கரக்கதிரைகளை ஒரேநேரத்தில் தள்ளிக்கொண்டு, விமானநிலையத்தை விட்டு வெளியேறுவதற்கு முயன்றபோதே, சந்தேகம் கொண்ட சுங்கத்திணைக்கள அதிகாரிகள், அந்த மூவரையும் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .