2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'முள்ளிவாய்க்கால் நினைவு: புலிகளுக்கானது அல்ல'

Kogilavani   / 2016 மே 25 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாநூ கார்த்திகேசு

முள்ளிவாய்க்காலில், மே 18ஆம் திகதி, முதன்முறையாக நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. அந்த நினைவுதின அனுஷ்டிப்பு, விடுதலைப் புலி அமைப்பின் உயிரிழந்த உறுப்பினர்களுக்கானது அல்ல என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்.பியான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அது, யுத்தத்தினால் உயிரிழந்த உறவுகளுக்கான துக்க அனுஷ்டிப்பாகும் என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (24), நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 'யுத்தத்தினால் இழந்த தங்களது உறவுகளை நினைவுகூரும் முகமாகவே இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் சாதாரண பொதுமக்கள், இராணுவ வீரர்கள், புலி உறுப்பினர்களும் உள்ளடங்கலாம். இது, ஒரு மனிதாபிமான அடிப்படையில், இறந்த உறவுகளை நினைவுகூருவதற்கு வாய்ப்பளிக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பமாகும்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றியுடையவர்களாக இருப்போம் எனத் தெரிவித்த அவர், அதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாகவும் அரசியல் கைதிகளின் ஒருமித்த விடுதலையானது, தெற்கில் சலனத்தை ஏற்படுத்தும் என்பதால் கட்டங்கட்டமாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .