2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சட்டவிரோதமாக மாடு அறுக்கும் நிலையத்தை நடத்திய மூவர் கைது

Niroshini   / 2016 மே 25 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

விலங்குப் பண்ணை  ஒன்றை நடத்தும் போர்வையில் சட்டவிரோதமாக மாடு அறுக்கும் நிலையம் ஒன்றை நடத்திய நபரையும் மேலும் இருவரையும் வலான குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் நேற்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

போலவத்தை, வயிக்கால பிரதேசத்தைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் , நிக்கவரெட்டிய, சிலாபம் ஆகிய பிரதேசங்களில் திரியும் மாடுகளை  அனுமதியில்லாமல் கடத்தி வந்து தங்கொட்டுவ பொதுசுகாதார காரியாலயத்தைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் உதவியுடன் சந்தேகநபர்கள் இந்த சட்டவிரோத மாடு அறுக்கும் நிலையத்தை நீண்ட காலமாக நடத்தி வந்துள்ளமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

கொல்லப்படும் மாடுகளின்  கழிவுகள் அருகில் உள்ள ஆள்நடமாட்டமில்லாத இடங்களில் வீசப்படுவதாகவும் இதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இதை நடத்துவதற்கு பிரதான சந்தேக நபருக்கு அவரது தந்தை, தாய் மற்றும் மனைவி ஆகியோர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிரதான சந்தேக நபரின் வீட்டில் இருந்த பாரிய குளிரூட்டியில் பன்றி இறைச்சி, கோழி இறைச்சி உட்பட பல்வேற விலங்குகளின் இறைச்சி இருந்ததாகவும்,  காலாவதியான அந்த இறைச்சி வகைகளுக்கு அங்கு தினமும் வருகை தரும் பொது சுகாதார பரிசோதகர்  நல்ல நிலையில் இருப்பதாக முத்திரை பதிப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .