2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முதலமைச்சர் விவகாரத்தை எவ்வாறு மறைக்கப்போகிறீர்கள்

Niroshini   / 2016 மே 29 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அண்மையில் சம்பூர் தமிழ் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற கிழக்கு முதலமைச்சர், கடற்படை முகாம் தளபதி ஆகியோருக்கு இடையிலான நிர்வாக முரண்பாட்டினை எவ்வாறு அடுத்த ஜெனீவா அமர்வில் மறைப்பீர்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

'சம்பூர் முழுமையாக விடுவிக்கப்பட்டுவிட்டது என கூறும் போது, எப்படி ஆயுதப்படையினர் பாடசாலைக்குள் வந்தனர்? அப்படி என்றால் சம்பூர் இன்னும் ஆயுதப்படையினர் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? என்று ஜெனீவாவில் அடுத்த அமர்வில் கேள்வி வருமே. அதனை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள்? அமெரிக்க தூதுவர் கூடவே இருந்தாரே, எப்படி மறைக்கப்போகிறீர்கள்?

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் என்று உத்தரவாதம் கொடுத்தீர்களே, இது எப்படி நடந்தது? அதுவும் சிறுபான்மைக்கான அதிகாரக் கையளிப்பின் அங்கமான கிழக்கு மாகாண சபை முதலமைச்சருக்கே எப்படி இப்படி நடக்க முடியும்? அப்படி என்றால் மனித உரிமை ஆணையகத்தை, ஐ.நா சபையை, சர்வதேச சமூகத்தை ஏமாற்றுகிறீர்களா? கடற்படை கிழக்குத் தளபதியின் இடமாற்றமும் அதற்கான நடவடிக்கைதான் என்று எங்களுக்குத் தெரியும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .