2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நினைவுப் பொருட்களை ஏலமிடுகிறார் பீலே

Shanmugan Murugavel   / 2016 மே 31 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸில் கால்பந்தாட்ட ஜாம்பவனான பீலே, தனது விளையாட்டுக் காலத்தில் கிடைக்கப்பெற்ற நினைவுப் பொருட்களை ஏலத்தில் விடுவதற்கு முடிவுசெய்துள்ளார். இந்த ஏலம், இலண்டனில் இம்மாதம் இடம்பெறவுள்ளதோடு, மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளது.

15 வயதில் சான்டோஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டதிலிருந்து, தற்போது வரை அவருக்குக் கிடைத்த பொருட்களையே அவர் ஏலமிடவுள்ளார். இதன்படி, 6 தசாப்தங்களாக அவரிடம் சேர்ந்த பொருட்களே, ஏலமிடப்படவுள்ளன.

மூன்று தடவைகள் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை வென்ற ஒரேயொரு வீரரான பீலே, தனக்குக் கிடைத்தவற்றைப் பேணிப் பாதுகாப்பது கடினமானது எனவும், அதை விட அவற்றை உலகத்துடன் பகிர்வதுடன், தனக்கு முக்கியமான பணிகளுக்கு உதவுவது, இதன் நோக்கமாகும் என்றார்.

இந்த ஏலத்தில் 2.5 மில்லியன் தொடக்கம் 3.5 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதோடு, கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதி, பிரேஸிலுள்ள குழந்தைகள் வைத்தியசாலையொன்றுக்கு வழங்கப்படவுள்ளது.

ஏலம் விடப்படவுள்ளவற்றில், உலகக் கிண்ணப் பதக்கங்கள், அணிந்த சீருடைகள், பாதணிகள், தனது 1,000ஆவது கோலை அடிக்கப் பயன்படுத்திய பந்து உட்படப் பல பொருட்கள் உள்ளடங்குகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .