2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இராஜினாமா செய்யவில்லை: ஹிஸ்புல்லாஹ் விளக்கம்

George   / 2016 மே 31 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சை தான் இராஜினாமா செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மறுத்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு வெளிநாடு சென்றுள்ளதாக இன்று தகவல் கசிந்திருந்தது.

இந்த தகவலை மறுத்து, இராஜாங்க அமைச்சர் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார். ஹிஸ்புல்லாஹ், வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'நான் இராஜாங்க அமைச்சுப் பதவியினை இராஜினாமா செய்து விட்டு வெளிநாடு சென்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை. 

அதேவேளை, மட்டக்களப்பு கெம்பஸ் விரிவாக்கம் தொடர்பில் கலந்துரையாடல்கள் மற்றும் ஒப்பந்தங்களை செய்து கொள்வதற்காக மலேசியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளேன்.

இராஜாங்க அமைச்சர்களது பதவிகள் - அதிகாரங்கள் உடனடியாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று சகல இராஜாங்க அமைச்சர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தோம். 

இந்தக் கோரிக்கைக்கு அமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்;கரமசிங்க ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களது அதிகாரங்கள் தொடர்பில் ஒருவார காலத்துக்குள் வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என்று  வாக்குறுதி வழங்கியுள்ளனர். இது தவிரவேறு எந்தவிதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .