2026 பெப்ரவரி 19, வியாழக்கிழமை

'அம்மா'வைச் சந்திக்க மங்கள கோரிக்கை?

Gavitha   / 2016 ஜூன் 01 , மு.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்க, இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அனுமதி கோரியுள்ளதாகவும், அதற்கு தமிழக அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மங்கள சமரவீர வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அதேபோல் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

சில நாட்களுக்கு முன்னர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்த ஜெயலலிதா, விரைவில் சந்திப்போம் எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவும், ஜெயலலிதாவைச் சந்திக்க அனுமதி கோரியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், தமிழக அரசாங்கத் தரப்பில், இது தொடர்பாக எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. மும்பையில், ஜூன் 13, 14 ஆகிய தினங்களில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்துகொள்ள மங்கள சமரவீர, இந்தியாவுக்குச் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .