2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

Leisure World இல் Ceylinco Life காப்புறுதிதாரர்கள்

Gavitha   / 2016 ஜூன் 01 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

Ceylinco Life காப்புறுதி நிறுவனம் அண்மையில் இலங்கையின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த Ceylinco Life காப்புறுதிதாரர் குடும்பங்களை அவிசாவளையிலுள்ள Leisure World க்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுவதும் அவர்கள் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி பிரச்சினைகள், பொறுப்புக்கள் அனைத்தையும் மறந்து மகிழ்ச்சியாக களிக்க வைத்திருந்தது.

9ஆவது வருடமாக தற்போது இடம்பெற்ற ஆயுட் காப்புறுதி முன்னோடிகளின் 'குடும்ப சவாரி' மெகா ஊக்குவிப்புத் திட்டத்தில் 500 காப்புறுதிதாரர் குடும்பங்களின் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு இவ்வாறு அழைத்து செல்லப்பட்டனர்.  

தேர்ந்தெடுக்கப்பட்ட 5 குடும்பங்களின் உறுப்பினர்கள் அன்றைய நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சிறகுகள் படபடக்கும் ஹெலிகெப்டர்களில் வானிலிருந்து கீழே தெரியும் காட்சிகளைப் பார்த்து ரசித்தவாறே Leisure World சுற்றிலும் வலம்வந்து குறுகியதூர சவாரியில் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.

ஜூன் மாதம் மேலும் 65 Ceylinco Life காப்புறுதிதாரர் குடும்பங்களில் 50 குடும்பங்கள் சிங்கப்பூருக்கும் 10 குடும்பங்கள் டுபாய்க்கும் 5 குடும்பங்கள் ஜேர்மனிக்கும் அழைத்துச் செல்லப்படுவார்கள் பயண ஆரம்பத்தில் Ceylinco Life பணிப்பாளரும் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியுமான துஷார ரணசிங்க கருத்து தெரிவிக்கையில், இந்தக் குடும்ப சவாரி ஊக்குவிப்புத் திட்டம் இலங்கையில் மிகவம் பிரசித்தி பெற்ற வாடிக்கையாளர் ஊக்குவிப்புத் திட்டமாகும் என்று கூறினார். கடந்த 12வருடங்களுக்கு மேலாக இலங்கையில் ஆயுட் காப்புறுதி முன்னோடியாக விளங்கி வருகிறது. ஆயுட் காப்புறுதி அனுகூலங்களுக்கு மேலதிகமாக காப்புறுதிதாரர்களுக்கு குடும்ப சவாரி போன்று வழங்கப்படும் பல்வேறு வாய்ப்புக்கள் நிறுவனத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளன என்றார்.

Leisure World இல் Ceylinco Life காப்புறுதிதாரர்களுக்கு உணவும் மென்பானங்களும் போக்குவரத்துக்கான வசதிகளும் வழங்கப்பட்டன. ஹெலிகொப்டர் சுற்றுலாவில் வெற்றி பெற்ற ஐந்து அதிஷ்டசாலி காப்புறுதிதாரர் குடும்பங்களும் பாணந்துறை, வவுனியா, பேருவளை, திருகோணமலை, திஸ்ஸமஹாராம ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த வருட குடும்ப சவாரி ஊக்குவிப்புத் திட்டத்தில் இதுவரை 2,260 பேர் வெளிநாட்டு விடுமுறை சுற்றுலாக்களை அல்லது மனமகிழ்வுச் சுற்றுலாக்களையும் வென்றெடுத்தள்ளனர். இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை மொத்தம் 17,000 பேர் இத்திட்டத்தினால் பயனடைந்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .