Shanmugan Murugavel / 2016 ஜூன் 01 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
2017ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில், இந்தியாவும் பாகிஸ்தானும், ஒரே குழுவிலேயே இடம்பிடித்துள்ளன. அதேபோல், அக்குழுவிலேயே இலங்கை அணியும் இடம்பெற்றுள்ளன.
ஜூன் 1, 2017இல் இங்கிலாந்தில் ஆரம்பிக்கவுள்ள இந்தத் தொடர், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சிறந்த 8 அணிகளுக்கான தொடராகும்.
இதற்கான தகுதிபெறும் நாளான செப்டெம்பர் 30, 2015இல் 9ஆவது இடத்தில் காணப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, இத்தொடருக்குத் தகுதிபெறத் தவறியிருந்தது. இதன்படி, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் தகுதிபெற்றிருந்தன. இந்நிலையிலேயே, இத்தொடருக்கான போட்டி அட்டவணையை, சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
தொடரின் முதலாவது போட்டியில், தொடரை நடாத்தும் இங்கிலாந்து அணி, பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இலங்கை அணி, ஜூன் 3ஆம் திகதி, தென்னாபிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது. இத்தொடரின் இறுதிப் போட்டி, ஜூன் 18ஆம் திகதி, ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
போட்டி அட்டவணை:
1 ஜூன் - இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ்
2 ஜூன் - அவுஸ்திரேலியா எதிர் நியூசிலாந்து
3 ஜூன் - இலங்கை எதிர் தென்னாபிரிக்கா
4 ஜூன் - இந்தியா எதிர் பாகிஸ்தான்
5 ஜூன் - அவுஸ்திரேலியா எதிர் பங்களாதேஷ்
6 ஜூன் - இங்கிலாந்து எதிர் நியூசிலாந்து
7 ஜூன் - பாகிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா
8 ஜூன் - இந்தியா எதிர் இலங்கை
9 ஜூன் - நியூசிலாந்து எதிர் பங்களாதேஷ்
10 ஜூன் - இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா
11 ஜூன் - இந்தியா எதிர் தென்னாபிரிக்கா
12 ஜூன் - இலங்கை எதிர் பாகிஸ்தான்
14 ஜூன் - முதல் அரையிறுதி
15 ஜூன் - 2ஆம் அரையிறுதி
18 ஜூன் - இறுதிப் போட்டி
19 ஜூன் - மேலதிக நாள்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .