Shanmugan Murugavel / 2016 ஜூன் 02 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகள் பங்குபற்றும் முக்கோணச் சுற்றுத் தொடர் நாளை வெள்ளிக்கிழமை (03) ஆரம்பிக்கிறது.
இலங்கை நேரப்படி இரவு 10.30மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியில், தொடரை நடாத்தும் நாடான மேற்கிந்தியத் தீவுகளை தென்னாபிரிக்கா கயானாவில் எதிர்கொள்கின்றது.
இத்தொடரின் அனைத்துப் போட்டிகளும் பகலிரவுப் போட்டிகளாகவே இடம்பெறவுள்ளதுடன், இறுதிப் போட்டியானது பார்படோஸில், ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெறவுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் குழாமில், அவ்வணியின் நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெயில், டுவைன் பிராவோ, அன்றே ரஸல், டரன் சமி ஆகியோர் இடம்பெறாத நிலையில், சுனில் நரைன், பொலார்ட் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்ற நிலையில், அவர்கள் சிறந்த பெறுபேறை வெளிப்படுத்த வேண்டிய அழுத்தம் காணப்படுகிறது.
மறுகணத்தில், தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான டேல் ஸ்டெயினுக்கு இத்தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவ்வணியின் பந்துவீச்சு வரிசை எவ்வாறு செயற்படப் போகின்றது என்றும் உலக இருபதுக்கு-20-இல் அவ்வணி அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்காத நிலையில், சிறந்த துடுப்பாட்ட பெறுபேறை வழங்கவேண்டிய அழுத்தமும் அவ்வணிக்கு காணப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .