2026 ஜனவரி 14, புதன்கிழமை

2017ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியில் 24 நாட்கள் சிவப்பு

Princiya Dixci   / 2016 ஜூன் 02 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017ஆம் ஆண்டுக்கான அரசாங்க மற்றும் வங்கி விடுமுறைத் தினங்களை உள்நாட்டலுவல்கள் அமைச்சு, புதன்கிழமை (01) வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், 2017ஆம் ஆண்டில், 24 நாட்கள் மாத்திரமே பொது விடுமுறைத் தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் வருடம் ஒன்றுக்கு பொது விடுமுறை நாட்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. இதனால், பொருளாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் ஏற்கெனவே கருத்து வெளியிட்டிருந்தனர்.

ஆசிய நாடுகளில், இலங்கையிலேயே வருடம் ஒன்றுக்கு அதிக விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. சிங்கப்பூரில் 13 நாட்களும் ஜப்பானில் 17 நாட்களும், இந்தோனேஷியாவில் 19 நாட்களும், தாய்லாந்தில் 20 நாட்களும் மாத்திரமே பொது விடுமுறைத் தினங்களாகக் காணப்படுகின்றன.

அத்துடன், அமெரிக்காவில் 09 நாட்களும் அவுஸ்திரேலியாவில் 10 நாட்கள் மாத்திரமே பொது விடுமுறைகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .