Shanmugan Murugavel / 2016 ஜூன் 02 , பி.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டாம் உலகப் போரின்போது ஒட்டோமான் படைகளால் 1915ஆம் ஆண்டு ஆர்மேனியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், ஓர் இனவழிப்பு என்பதை ஏற்றுக் கொள்ளும் தீர்மானமொன்றுக்கு, ஜேர்மனிய நாடாளுமன்றம், அங்கிகாரமளித்துள்ளது.
இந்த வாக்கெடுப்பில், ஒரே ஒருவர் எதிர்த்து வாக்களித்ததோடு, மற்றைய ஒருவர், வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்தார். ஏனைய அனைவருமே, தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
ஆர்மேனியர்களை, ஒட்டோமானில் வைத்து, ஒட்டோமான் அரசாங்கம் கட்டமைப்புரீதியாகக் கொன்றொழித்தமை, ஆர்மேனிய இனவழிப்பு எனப்படுகிறது. இந்த நடவடிக்கையில், 1.5 மில்லியன் வரையிலானோர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. ஒட்டோமான் பேரரசு, நடப்பு துருக்கியாக மாற்றம்பெற்ற நிலையில், குறித்த படுகொலைகளை, இனவழிப்பு என விளிப்பதை துருக்கி ஏற்றுக் கொள்வதில்லை.
இந்த வாக்களிப்பு முடிவை, ஆர்மேனிய வெளிநாட்டமைச்சர் வரவேற்றுள்ளதோடு, ஆர்மேனிய இனவழிப்பை சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ள வைப்பதற்காக பெறுமதிமிக்க பங்களிப்பு என வர்ணித்தார்.
மறுபுறத்தில் துருக்கி, ஜேர்மனிக்கான தனது தூதுவரை, 'ஆலோசனை" நோக்கங்களுக்காக, திரும்ப அழைப்பதாகத் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .