Niroshini / 2016 ஜூன் 05 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சபாபதிபிள்ளை சந்தி பகுதியில், மதுபானம் அருந்திக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் ஐவரை சனிக்கிழமை (04) மாலை கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எல்.துஸ்மந்த தெரிவித்தார்.
யாழ். நகரில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் கும்பலொன்று, பொலிஸாரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளது.
இவர்களை துரத்தி பிடித்த பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை செய்தபோது இவர்கள் பாடசாலை மாணவர்கள் என தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு எதிராக பொதுவிடத்தில் மதுபானம் அருந்திய குற்றச்சாட்டில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .