Niroshini / 2016 ஜூன் 05 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடித்தஇந்திய மீனவர்கள் நால்வரை கடற்படையினர், இன்று ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள மாவட்ட உதவிபணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா தெரிவித்தார்.
தமிழ்நாடு - இராமேஸ்வரம் பகுதியில் இருந்து விசைப்படகில் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த குறித்த மீனவர்கள், நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோதே காங்கேசன்துறை கடற்படையினர்களால் கைதுசெய்யப்பட்டனர்.
கடற்படையினரிடம் இருந்து பொறுப்பேற்ற மீனவர்கள் நால்வரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவானின் வாசஸ்தலத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .