Kogilavani / 2016 ஜூன் 05 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கர்ணன்
நல்லூர், உடுப்பிட்டித் தொகுதிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உப சபாநாயகருமான அமரர் மு.சிவசிதம்பரத்தின் 14ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) வடமராட்சி நெல்லியடியில் இடம்பெற்றது.
நெல்லியடி பஸ் நிலையப் பகுதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஏம்.ஏ.சுமந்திரன் உட்பட பலர் மலர் மாலை அணிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து கரணவாய் மூத்தவிநாயகர் ஆலய மண்டபத்தில் அஞ்சலிக் கூட்டம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .