2026 பெப்ரவரி 19, வியாழக்கிழமை

கோப்பா அமெரிக்கா: தப்பித்தது பிரேஸில்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 05 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோப்பா அமெரிக்கா கால்பந்தாட்டத் தொடர் ஆரம்பித்துள்ள நிiயில், ஐந்து தடவைகள் உலகச் சம்பியனாகிய பிரேஸில் அணி, இத்தொடரின் முதலாவது போட்டியில் தோற்பதிலிருந்து, அதிர்ஷ்டத்தின் உதவியுடன் தப்பித்தது.

ஈக்குவடோர் அணிக்கெதிராக இடம்பெற்ற இப்போட்டியில், ஈக்குவடோரின் மில்லர் பொலனோஸ் அடித்த கோல், சர்ச்சைக்குரிய விதத்தில், இல்லையெனத் தீர்மானிக்கப்பட்டது. அவர் கோல் கம்பத்துக்குள் பந்தை அனுப்புவதற்கு முன், விளையாட்டு எல்லையை விட்டுப் பந்து சென்றுவிட்டதாகத் தெரிவித்தே, அவரது கோல், இல்லையென அறிவிக்கப்பட்டது.

ஆனால், மீள் ஒளிபரப்புகளின்போது, பந்து முழுமையாக வெளியே சென்றிருக்கவில்லை என்பதும், பிரேஸில் அதிர்ஷ்டவசமாகத் தப்பிவிட்டது என்பதும் தெரியவந்தது. இப்போட்டி, பின்னர், 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இடம்பெற்ற ஏனைய போட்டிகளில், கொஸ்டா றிக்கா அணிக்கும் பரகுவே அணிக்குமிடையிலான போட்டி, கோல்கள் பெறப்படாமல் சமநிலையில் முடிவடைந்தது. ஹெய்ட்டி அணிக்கும் பெரு அணிக்குமிடையிலான போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் பெரு அணி வெற்றிபெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .