2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

விமானக் கொந்தளிப்பில் பயணிகளும் விமானப் பணியாளர்களும் காயமடைவு

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 06 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலண்டனிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த மலேஷியா எயார்லைன்ஸ் விமானமொன்றில் ஏற்பட்ட விபத்தில், எண்ணிக்கை வெளிப்படுத்தப்படாத பயணிகளும் பணியாளர்களும் காயமடைந்ததாக, அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

MH370, MH14 என இரண்டு விமானங்கள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அதிலிருந்து இன்னமும் வெளிவரத் தடுமாறிவருகிறது. இந்நிலையிலேயே, இந்த விபத்துச் சம்பந்தமான விவரங்கள், அந்த நிறுவனத்துக்கு மேலதிக பாதிப்பை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கக் கடலுக்கு மேலால் பறந்துகொண்டிருந்த போதே, விமானத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்போது, சில பயணிகளும் பணியாளர்களும் காயமடைந்ததாக உறுதிப்படுத்திய மலேஷிய எயார்லைன்ஸ், அவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டதாக உறுதிப்படுத்தியது. குறித்த விமானத்தில் பயணிகளும் விமானப் பணியாளர்களுமென 378 பேர் பயணித்திருந்த நிலையில், எத்தனை பேருக்குக் காயம் ஏற்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகியிருக்கவில்லை.

ஆனால், உணவுகள் விமானத்துக்குள் சிதறிக் கிடக்கும் புகைப்படங்களும் தலையணைகளும் ஏனைய பொருட்களும் சிதறிக் கிடக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. அத்தோடு, கழுத்துப் பாதுகாப்பை அணிந்த பெண் பயணியொருவர், தூக்குப் படுக்கையொன்றின் உதவியுடன் விமானத்திலிருந்து வெளியே கொண்டுவரப்படும் காட்சியும், வெளியாகியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X