2026 ஜனவரி 29, வியாழக்கிழமை

ஜனாதிபதி வருமுன்னமே அவரது ஆசனம் நிரம்பியது

Kogilavani   / 2016 ஜூன் 10 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

நாடாளுமன்றத்தில், சபைக்குள் இருக்கின்ற ஜனாதிபதிக்கான ஆசனம் சில நிமிடங்கள் நேற்று வியாழக்கிழமை (09) நிரம்பியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்றுக் காலை 9.30க்கு நாடாளுமன்றம் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்று கொண்டிருக்கும் போது, பிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபால, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஏதோ கலந்துரையாடுவதற்காக வந்தார்.  அவ்வாறு வந்தவர் பிரதமருக்கு வலது பக்கத்தில் இருக்கின்ற ஜனாதிபதிக்கான ஆசனத்தில் அமர்ந்து விட்டார்.

அமர்ந்தவர், பிரதமர் ரணிலுடன் ஏதோ கதைத்துக் கொண்டிருந்தார். சில நிமிடங்கள் அமர்ந்திருந்து கதைத்துக் கொண்டிருந்த பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, பின்னர் எழுந்து சென்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக்கவின் ஆசனத்துக்கு அருகில் உள்ள ஆசனத்தில் அமர்ந்து சில நிமிடங்கள் கதைத்து கொண்டிருந்தார்.

இதேவேளை, ஏதோ ஒரு விடயத்தை பிரதமரிடம் கதைப்பதற்காக வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, ஜனாதிபதிக்கான ஆசனத்துக்கு அருகில் நின்று கொண்டே கதைத்துக் கொண்டிருந்தார்.

நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்பட்டுள்ள ஆசனங்களில், ஜனாதிபதி மற்றும் பிரதம் ஆகியோரின் ஆசனங்களில் வேறு எந்தவொரு உறுப்பினரும் அமரக்கூடாது. அதேபோல, ஏனைய உறுப்பினர்களும் தங்களுடைய ஆசனங்களை தவிர ஏனைய உறுப்பினர்களின் ஆசனங்களிலிருந்து உரையாற்ற முடியாது. அது நிலையியற்கட்டளைக்கு முரணானது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X