Shanmugan Murugavel / 2016 ஜூன் 09 , பி.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கெதிராக லோர்ட்ஸில் ஆரம்பமான மூன்றாவது டெஸ்ட்டின் முதலாவது நாள் ஆட்ட முடிவில், தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 279 ஓட்டங்களைப் பெற்று, நிதானமான நிலையில் உள்ளது.
தற்போது களத்தில், ஜொனி பெயார்ஸ்டோ 107 ஓட்டங்களுடனும் கிறிஸ் வோக்ஸ் 23 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக, அணித்தலைவர் அலிஸ்டியர் குக் 85 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
பந்துவீச்சில் இலங்கையணி சார்பாக, சுரங்க லக்மால், நுவான் பிரதீப், ரங்கன ஹேரத் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
முன்னதாக, நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதாக அறிவித்தது. இலங்கையணி சார்பாக காயமடைந்த மிலிந்த சிரிவர்தனவுக்கு பதிலாக, ஊக்கமருந்து பயன்படுத்தியதாக தவறுதலாக குற்றஞ்சாட்டப்பட்டு தடை விதிக்கப்பட்டு, தற்போது மீண்டும் திரும்பியுள்ள குஷால் பெரேரா அணியில் இடம்பெற்றார். தவிர, பந்தை வீசியெறிகிறார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்ட ஷமின்ட எரங்கவும் இலங்கையணியில் இடம்பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .