2026 ஜனவரி 11, ஞாயிற்றுக்கிழமை

தீர்ப்பு மீள் பரிசீலனைத் திட்டத்தில் நடுவரின் தீர்ப்பின் ஆதிக்கம் குறைக்கப்படவுள்ளது

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 10 , மு.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீர்ப்பு மீள் பரிசீலனைத் திட்டத்தில், கள நடுவர் வழங்கும் தீர்ப்பு செலுத்தும் தாக்கத்தை குறைப்பதற்கான பரிந்துரை மேற்கொள்ளப்பட்டதாக இலங்கையணியின் முன்னாள் தலைவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் செயற்குழுவிலுள்ளவருமான மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் சர்வதேச கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் செயற்குழுவுக்கு நியமிக்கப்பட்டு, கடந்த வாரம் இடம்பெற்ற குறித்த குழுவின் இறுதிச் சந்திப்பில் பங்கேற்றிருந்த ஜயவர்தனவே, தீர்ப்பு மீள் பரிசீலனைத் திட்டத்தில், கள நடுவரின் தீர்ப்பு செலுத்துகின்ற தாக்கமானது அரைவாசியாக குறைக்கப்படுவதற்கான பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிப்படுத்தியுள்ளார்.

மேற்கூறப்பட்ட மாற்றமானது அனுமதிக்கப்படுமானால், கள நடுவர் வழங்கிய ஆட்டமிழப்பில்லை என்ற தீர்ப்பை மாற்றுவதற்கு 25 சதவீதமான பந்து, விக்கெட்டுகளை தாக்கினாலே போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய விதிமுறைகளின்படி, கள நடுவரின் ஆட்டமிழப்பு இல்லையென்ற தீர்ப்பை மாற்றுவதற்கு, 50 சதவீதமான பந்து, விக்கெட்டை தாக்கவேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.

ஜயவர்தன வெளிப்படுத்திய பரிந்துரையின்படி, தற்போது லோர்ட்ஸில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் டெஸ்ட் போட்டியில் சதம் பெற்ற ஜொனி பெயார்ஸ்டோ, 56 ஓட்டத்துடன் ஆட்டமிழந்திருப்பார். எனினும் கள நடுவர் எஸ்.ரவி வழங்கிய ஆட்டமிழப்பு இல்லை என்ற தீர்ப்பின் காரணமாக, இடது புற விக்கெட்டில், 50 சதவீதத்துக்கு சற்றுக் குறைவான சதவீதத்திலேயே பந்து தாக்கியிருந்ததால் பெயார்ஸ்டோ தப்பித்திருந்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .