Shanmugan Murugavel / 2016 ஜூன் 10 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்காவுக்கான டெஸ்ட் தொடர்களுக்காகச் செல்லும் நியூசிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, 16 பேர் கொண்ட குழாமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்ட குழாமில், முதற்தடவையாக நியூசிலாந்துக் குழாமொன்றில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஜீட் ராவல் இடம்பிடித்ததோடு, புறச் சுழற்பந்துவீச்சாளர் இஷ் சோதியும் மீண்டும் டெஸ்ட் குழாமில் இடம்பிடித்திருக்கும் நிலையில், சகலதுறை வீரர் கொரே அன்டர்சன் குழாமில் இடம்பிடித்திருக்கவில்லை.
எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதி ஹராரேயில் ஆரம்பிக்கவுள்ள போட்டியுடன் இத்தொடர் ஆரம்பிக்கவுள்ளது.
குழாம்: கேன் வில்லியம்ஸன் (தலைவர்), ட்ரெண்ட் போல்ட், டவ் பிரேஸ்வெல், மார்க் கிரேய்க், மார்ட்டின் குப்தில், மற் ஹென்றி, டொம் லதாம், ஹென்றி நிக்கொல்ஸ், லுக் ரோங்கி, ஜீட் ராவல், மிற்செல் சந்தர், இஷ் சோதி, டிம் சௌதி, றொஸ் டெய்லர், நீல் வக்நர், பி.ஜெ.வோட்லிங்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .